புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 26-09-2019 | 6:16 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நிபந்தனைகளுடனான அரசியல் பயணத்திற்கு தயாரில்லை என அமைச்சர் சஜித் தெரிவிப்பு 02. 4/21 தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் தொடர்பில் நீதியரசர்கள் கேள்வி 03. அமைச்சர் சஜித்தின் வேண்டுகோளின் பிரகாரம், கட்சியில் இணையும் திஸ்ஸ அத்தநாயக்க 04. தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில்வே தொழிற்சங்கங்கள்  05. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் குறித்து சிந்திக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தல் 06. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு குறித்த மனு தள்ளுபடி 07. காலி, மாத்தறை மாவட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை 08. கடற்படையில் மீண்டும் யோஷித ராஜபக்ஸ 09. அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு பணிப்பகிஷ்கரிப்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழப்பு 02. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸனைப் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் விளையாட்டுச் செய்தி 01. 2019 உலகக் கிண்ண ரக்பி தொடரில் Fiji அணிக்கு எதிரான போட்டியில் 30 – 27 என்ற புள்ளிகள் கணக்கில் உருகுவே அணி வெற்றி