செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Aug, 2019 | 6:05 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. 29,174 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

02. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் அகில விராஜ் காரியவசம் கையொப்பமிடவில்லை.

03. நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்தமை தொடர்பில் பெருமையடைவதாக, பிரதமர் தெரிவித்துள்ளார்.

04. கொழும்புத் துறைமுக நகர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

05. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை மேற்கொண்ட செயற்பாடுகள் உலகத்திற்கு சிறந்த முன்னுதாரணம் என யசூஷி அகாஷி தெரிவித்துள்ளார்.

06. மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

07. ஶ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபையை கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

08. கொழும்பு குப்பைகளை அருவக்காட்டிற்கு ரயிலில் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் அமுல்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

09. முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளார்.

02. ஹொங்கொங் விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

01. இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்றுநர் நியமனத்தின் போது, பயிற்றுநரின் எதிர்பார்ப்பிற்கு மேலதிகமான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

02. இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் நியூஸிலாந்து அணியை டிம் சௌத்தீ வழிநடத்தவுள்ளார்.

03. நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை அணியின் அகில தனஞ்சய ஆகியோரின் பந்துவீச்சு குறித்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்