நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது 

நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்தமை தொடர்பில் பெருமையடைகின்றோம்: பிரதமர்

by Staff Writer 20-08-2019 | 7:10 PM
Colombo (News 1st) தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 8500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்திலேயே வருமானம் அதிகரிக்கும். அவை இரண்டையும் இணைத்து பயணிக்க வேண்டும். எவ்வகையான பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்தமை தொடர்பில் நாம் பெருமையடைகின்றோம். அரச பிரிவில் இரு மடங்காக அதிகரித்தது. தனியார் பிரிவில் 50 வீதத்தில் இருந்து இரு மடங்காக அதிகரித்தது. ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் போது இதனை விடவும் தனியார் பிரிவின் வருமானம் அதிகரிக்கும் என நான் கூற விரும்புகின்றேன். ஏற்றுமதி பொருளாதாரமே எமது அடுத்த இலக்காகும்.

ஏனைய செய்திகள்