புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-08-2019 | 6:12 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சுழற்சி முறையில் முன்னெடுத்து வரும் உணவுதவிர்ப்புப் போராட்டம் 900 நாட்களை எட்டியுள்ளது. 02. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கம்போடியாவிற்கு சென்றுள்ளார். 03. கண்டி – வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 04. உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணியின் மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 05. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார். 06. அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோருக்குக் கௌரவத் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. 07. 8 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளையும் இரத்து செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. 02. இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் காலஞ்சென்ற சுஷ்மா சுவராஜின் உடல் அக்கினியில் சங்கமமாகியது. 03. மெக்ஸிக்கோவில் நாணயங்களை அச்சிடும் நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து தங்க நாணயங்கள் திருடப்பட்டுள்ளன. விளையாட்டுச் செய்திகள் 01. நியூஸிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ருமேஷ் ரத்நாயக்க, இலங்கை அணியின் தலைமை பயிற்றுநராக செயற்படவுள்ளார். 02. டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.