ஜனாதிபதி கம்போடியா சென்றடைந்தார்

by Staff Writer 07-08-2019 | 7:36 PM
Colombo (News 1st) நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கம்போடியா சென்றடைந்தார். கம்போடியாவின் உப பிரதமர் மற்றும் அமைச்சர் Khieu Kanharith ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்நாட்டு விமான நிலையத்தில் வரவேற்றனர். இந்த விஜயத்தின் போது, கம்போடியாவின் மன்னர் Norodom Sihamoni மற்றும் பிரதமர் Hun Sen ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இலங்கைக்கும் கம்போடியாவிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை விரிவுபடுத்தி, பரஸ்பர நன்மைகளை மேலும் மேம்படுத்துதல் இந்த விஜயத்தின் நோக்கமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த மத உறவுகளை வலுப்படுத்துதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. அத்துடன், புதிய உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதேவேளை, இலங்கை - கம்போடியா வர்த்தக மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை ஆரம்பமானது.