புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

22 Aug, 2019 | 6:09 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

02. கொழும்பிலிருந்து அருவாக்காட்டிற்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற லொறிகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

03. ஸ்ரீலங்கன் விமானத்தில் களியாட்ட நிகழ்வு இடம்பெற்றமைக்கு அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

04. அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

05. யசூஷி அகாஷி, இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

06. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

07. எட்டாவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடருக்கான கோப் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

08. இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களைத் திருத்தத்திற்கு உட்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

09. இலங்கை இராணுவத்தின் 23ஆவது தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

10. GPS தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை மேலும் நீடிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப .சிதம்பரத்தை தேடப்படும் நபராக இந்திய அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

02. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கிற்கான தனது விஜயத்தை இரத்து செய்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

01. இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட Cricket Aid எனும் நிறுவனம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

02. ஆசஷ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்