GPS பொருத்தாத அரைசொகுசு பஸ்கள் குறித்து தீர்மானம்

GPS கருவி பொருத்தாத அரைசொகுசு பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்

by Staff Writer 21-08-2019 | 7:35 AM
Colombo (News 1st) GPS தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை மேலும் நீடிக்காதிருப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அவ்வாறான 16 பஸ்கள் தொடர்பில் நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லமாரச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, GPS தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தப்படாத நூற்றுக்கும் அதிகமான அரைசொகுசு பஸ்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பஸ்கள் எப்பகுதியில் பயணிக்கின்றன என்பது தொடர்பில் அறிந்துகொள்வதற்காகவும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எவ்வளவு கிலோமீற்றர் தூரம் பஸ் பயணித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக GPS தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.