திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-08-2019 | 6:45 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்காக 7 நாட்களுக்குள் பாராளுமன்றக் குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டுமாறு பிரதமரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 02. புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 03. ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளதாக இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. 03. இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தூதுவர்கள் இருவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதியிடம் நியமனப் பத்திரங்களை கையளித்துள்ளனர். 04. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான ஜப்பானின் முன்னாள் சமாதானத் தூதுவர் யசூஷி அகாஷி, மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். 05. மக்கள் சக்தியின் மக்கள் மன்ற செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. உடன்படிக்கை அற்ற பிரெக்ஸிட் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவிருப்பதாக, ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 02. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கத்லீன் பபினியூக்‌ஸ் பிளான்கோ (Kathleen Babineaux Blanco) தமது 76 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது. 02. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான நிரல்படுத்தலில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முன்னேறியுள்ளார்.