செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

17 Jul, 2019 | 6:01 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

02. அமெரிக்காவின் மற்றுமொரு சரக்கு விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்து பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளது.

03. அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கையின் சாரணர்கள் குழுவிற்கு தேசியக்கொடி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

04. எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

05. உனவட்டுன, ரூமஸ்ஸல பகுதியில் கற்பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்ட போது இளைஞர்கள் நால்வர் கடலில் வீழ்ந்துள்ளனர்.

06. கந்தபுராணத் தொடர்புடைய தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட வேல்பவனி இனிதே நிறைவடைந்துள்ளது.

07. மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையிலிருந்து விலகி, தபால் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. மத்திய கிழக்கில் பதற்றநிலை அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியாக ஈரானிய, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக, பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

02. நேபாளம் மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

01. உலக சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர்கள் அந்நாட்டு பிரதமர் தெரேசா மேயை சந்தித்துள்ளனர்.

02. இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் இந்தத் தடவை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் அதிக கோல்களைப் பெற்ற வீராங்கனை எனும் சாதனையை தனதாக்கியுள்ளார்.

03. உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் போராடி வீழ்ந்த நியூஸிலாந்து, தோல்விக்கு தகுதியான அணி அல்ல என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்