home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
by Chandrasekaram Chandravadani
20-06-2019 | 6:09 AM
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ திட்டமிட்டமாறு இலங்கை விஜயத்தில் ஈடுபட முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
02.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸூக்கு வௌிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யுமாறு சட்டமா அதிபரால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு நகர்த்தல் பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. 03.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
04.
குருணாகல் வைத்தியர் ஷாஃபி தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்த 601 பெண்கள் உள்ளிட்ட 758 பேரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம்
பதிவு செய்துள்ளது. 05.
நேற்று (19ஆம் திகதி) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது.
06.
கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
07.
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருந்த கபீர் ஹஷீம் மற்றும் M.H.A. ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
08.
வெலிக்கந்த – மட்டக்களப்பு வீதியின் கொலகனவாடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. ஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரன்சி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 02. 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 03. அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
01. வெளிநாடுகள் இரண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட வங்கிக்கணக்குகள் தம்முடையதல்ல என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 02. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது.
ஏனைய செய்திகள்
மீண்டும் ஆரம்பமான கொழும்பு - பேராதனை ரயில் சேவை
பி.பீ. ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு
31ஆவது ஆசிய தொலைக்காட்சி விருது விழா
ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து 148 மில்லியன் ரூபா
லலித், குகன் வழக்கில் கோட்டாபய ராஜபக்ஸ சாட்சி
உலக சனத்தொகையில் 7.8% பேருக்கு உணவுப் பற்றாக்குறை
செய்தித் தொகுப்பு
லலித், குகன் வழக்கில் கோட்டாபய ராஜபக்ஸ சாட்சி
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
லலித், குகன் வழக்கில் கோட்டாபய ராஜபக்ஸ சாட்சி
பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெல்லும் காலம்..
08ஆவது ஆண்டு பூர்த்தியில் Fox Resorts Jaffna
இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய வௌிக்கொணர்வு
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World