வெலிக்கந்தையில் வாகன விபத்து: ஐவர் உயிரிழப்பு; 12 பேர் காயம்

by Staff Writer 19-06-2019 | 7:22 AM
Colombo (News 1st) வெலிக்கந்த - மட்டக்களப்பு வீதியின் கொலகனவாடிய பகுதியில் இன்று (19ஆம்திகதி) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புலாகலவில் இடம்பெற்ற பொசன் பெரஹரா நிகழ்வைப் பார்வையிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர். வெலிகந்த நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த உழவியந்திரத்துடன் அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது உழவியந்திரத்தில் 17 பேர் பயணித்துள்ளதுடன் வானில் 4 பேர் பயணித்துள்ளனர். உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்ட வேன் வேகத்தைக்க கட்டுப்படுத்த முடியாமல் உழவியந்திரத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உழவியந்திரத்தில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த  12 பேரும் சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்