புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

13 Jun, 2019 | 6:10 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

02. இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

03. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

04. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சீல் வைக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பூட்டை உடைத்து, அங்கு செப்பு திருடிய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

05. பயணிகள் பஸ்ஸினை மது போதையில் ஓட்டிய சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

06. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நேற்று (12ஆம் திகதி) முதல் ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

07. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, M.L.A.M. ஹிஸ்புல்லாவை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

02. இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் வகையில், தமிழகத்தின் சில பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

03. ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரச அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

01. பிரான்ஸில் நடைபெறும் மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் அமெரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

02. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள நாட்களில் தரவரிசையில் முன்னிலையில் நீடிக்கின்ற அணிகளை எதிர்த்தாடவுள்ளமையால் அதற்குத் தயாராதல் வேண்டும் என, இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்