மது போதையில் பஸ்ஸை செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

மது போதையில் பஸ்ஸை செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

மது போதையில் பஸ்ஸை செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

எழுத்தாளர் Bella Dalima

12 Jun, 2019 | 5:19 pm

Colombo (News 1st) பயணிகள் பஸ்ஸினை மது போதையில் ஓட்டிய சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா- கொழும்பு வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றின் சாரதியே மது போதையில் பஸ்ஸினை செலுத்தியுள்ளார்.

கம்பஹா மேலதிக நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் குறித்த சாரதி இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை நீதவான் நிரந்தரமாக இரத்து செய்யுமாறு உத்தரவிட்டார். அவருக்கு 7500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் மிக மோசமான முறையில் பஸ்ஸை ஓட்டிய குறித்த சாரதியை, போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதன்போது சாரதி மது போதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்