சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 30-06-2019 | 6:23 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 4 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. 02. குருணாகல் வைத்தியசாலை மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீனை கைது செய்யும்போது பொலிஸாரினால் தவறிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 03. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்திற்கும் இரணைமடுக் குளத்துநீர் வௌியேற்றத்திற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட குழுவின் இரண்டாம் கட்ட அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. 04. பியகம – மாபிம பகுதியில் நுகர்விற்கு உதவாத தானியங்களைக் கொண்டிருந்த களஞ்சியசாலை மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதற்கு ஏ.ஜே.எம். முசம்மில் நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 05. அத்தியாவசிய சேவையாக ரயில் சே​வை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 06. மாகந்துரே மதுஷ் பதுக்கிவைத்திருந்த T - 56 ரக துப்பாக்கியொன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்தி 01. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயற்படுத்த அமெரிக்காவை தவிர G 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றுள்ளன. விளையாட்டுச் செய்திகள் 01. சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க கருத்து தெரிவித்துள்ளார். 02. அகில இலங்கை பாடசாலைகள் ரக்பி லீக் தொடரில் கொழும்பு ரோயல் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.