புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-09-2019 | 6:25 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை 02. ஜனாதிபதி வேட்பாளருக்கு அமெரிக்காவில் 18 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீடு இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவிப்பு 03. சில தினங்களில் ஐ.தே.கவின் வேட்பாளர் பெயரிடப்படவுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு 04. 50 ரூபா கொடுப்பனவை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இந்தத் தடவையும் ஏமாற்றம் 05. கோட்டாபயவிற்கு எதிராக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்கை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிப்பு 06. ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் 06. மீண்டும் தலைதூக்கும் மலேரியா  07. ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாது என பிரதமர் அறிவிப்பு 08. நியமனத்தில் முறைகேடு நிலவுவதாகத் தெரிவித்து கல்விசாரா ஊழியர்கள் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் 09. Batticaloa Campus நிறுவனத்திற்கு நிதி வழங்கிய நிறுவனம் தொடர்பில் விசாரணை 10. வவுனியாவில் தினமும் 10 மணிநேர நீர்வெட்டு வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜோன் போல்டனை (John Bolton) நீக்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 02. இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வீரர்கள் விலகியமைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு 02. பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை வீரர்கள் விலகியமை தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா தனது ஏமாற்றத்தை வௌிப்படுத்தினார் 03. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை சர்வதேச ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவராக பெயரிடப்பட்டார்