சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

18 Aug, 2019 | 6:36 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டமைப்பு தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.

02. ஹட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

03. தெஹிவளை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய படகொன்று தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

04. கதிர்காமம் – பெரகிரிகம பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

05. கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் ஒன்றரை மாத சிசு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

02. 2027 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கட்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

01. சர்வதேச பொலிஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனாகியுள்ளது.

02. தெற்காசிய விளையாட்டு விழாவில் 10,000 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை ஹட்டனைச் சேர்ந்த கனகேஸ்வரன் சண்முகேஸ்வரன் பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்