செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-10-2019 | 7:31 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. M.S.செல்லச்சாமி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு 02. தேசிய பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை என கோட்டாபய குற்றச்சாட்டு 03. அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் தூண்டப்படுவதாக மகேஷ் சேனாநாயக்க கருத்து 04. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி 05. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் மீள பெறப்படும் என அனுர குமார வாக்குறுதி 06. ஜப்பானிய பேரரசர் நருகிடோவின் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு 07. கோட்டாபயவிற்கு எதிராக லசந்த விக்ரமதுங்கவின் மகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 08. ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது 09. நிஸங்க சேனாதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு வௌிநாட்டுச் செய்திகள் 01. கனேடிய பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆளும் லிபரல் கட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துள்ளது. 02. பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம், பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மனித உணர்வுகளைக் கண்டறியும் செயற்கை தோலைக் கண்டுபிடிப்பு 03. சிரியாவில் அமெரிக்கப் படையினர் சிலர் தங்கியிருப்பர் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 04. தம்மால் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க முடியாது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு 05. ஸிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக 55 யானைகள் உயிரிழப்பு விளையாட்டுச் செய்தி 01. தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.