நிஸங்க சேனாதிபதியை மன்றில் ஆஜர்ப்படுத்த உத்தரவு

நிஸங்க சேனாதிபதியை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு

by Staff Writer 22-10-2019 | 1:39 PM
Colombo (News 1st) Avant Garde நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று (22) உத்தரவு பிறப்பித்துள்ளார். Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு அந்நிறுவனத்திடமிருந்து 355 இலட்சம் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் இலஞ்சம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கின் விசாரணைகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதலாவது பிரதிவாதி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மன்றில் ஆஜராகியிருந்தார். இரண்டாவது பிரதிவாதியான நிஸங்க சேனாதிபதி, விசேட மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.