சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jun, 2019 | 6:18 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி நியமித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு குறித்து தெரிவித்த கருத்திற்கு, சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்துள்ளது.

02. தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

03. மாத்தறை – அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

04. சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய 4 பேர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.

05. நீர்கொழும்பில் சட்டவிரோதமாக சர்வதேச தொலைத்தொடர்பு சேவையை முன்னெடுத்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

06. அமைச்சரவையிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்தமைக்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் ​செயலியை உள்ளடக்காதிருக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகியுள்ளது.

02. தென் ஆப்பிரிக்காவில் மிருகக்காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பியோடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

03. 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்குவதற்கு ஆகும் செலவு 35,000 டொலர்கள் (சுமார் 6.1 மில்லியன் ரூபா) என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்