புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 06-06-2019 | 5:53 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையினுடைய வளங்கள் தேவை என, தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். 02. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. 03. சகவாழ்வு மற்றும் அரச பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 04. தேர்தல் திகதியை குறிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளதாக, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தெரிவித்துள்ளார். 05. முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமையால், பாராளுமன்ற சபையில் ஆசனங்களை ஒதுக்குவதில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. 06. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தொடர்பான புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 07. கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துள்ளார். 08. சிறைத்தண்டனை அனுபவித்துவந்த இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் நல்லிணக்கத்தின் அடிப்படையில் 190 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 02. ABC (Australian Broadcasting Corp) என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியமையானது அணி வீரர்களின் மனநிலையை உயர்வடையச் செய்துள்ளதாக, இலங்கை அணியின் பிரதான பயிற்றுநரான சந்திக்க ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். 02. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி, டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.