Col0mbo (News1st)நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று(11) அதிகாலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.விபத்தில் சுமார் 40 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குருநாகல் பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு நுவரெலியா, நாவலப்பிட்டி மற்றும...