மாதுரு ஓயாவில் பெல் 212 ரக விமானம் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த இயலுமென பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 9 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக விமானம் மாதுரு ஓயா வில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் வ...