கடுவெல தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

by Staff Writer 19-11-2026 | 8:34 AM

Colombo (News 1st) கடுவெல பகுதியிலுள்ள இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று(19) ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் 02 பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.

தீ பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.