IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தோனி

IPL கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எம்.எஸ்.தோனி

by Staff Writer 18-11-2026 | 10:07 AM

Colombo (News 1st) IPL கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளருமான எம்.எஸ்.தோனி அறிவித்துள்ளார்.

2027 IPL தொடர் முதல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக அவர் செயற்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான மஹேந்திர சிங் தோனி அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஏற்கெனவே ஓய்வு பெற்ற நிலையில், தற்போது IPL போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

45 வயதான தோனி 2008 முதல் IPL போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

அவர் தனது IPL பயணத்தில் 05 தடவைகள் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை ஈட்டிக்கொடுத்துள்ளார்.