.webp)
-561614.jpg)
Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுத்தளம் அழிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து, இந்த டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாடுகள் 05 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அவர் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு கூறினார்.
அதற்கமைய, எதிர்வரும் 06 மாதங்களுக்குள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாடுகள் நிறைவுபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
