.webp)

COLOMBO (News 1st) சிவராஜா அனோஜனுக்கு எதிராக சவூதி அரேபியாவில் முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிவராஜா அனோஜனை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்வதற்கு சவூதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வௌிவிவகார அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
இதற்கமைய சிவராஜா அனோஜனை விரைவில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாகவும் வௌிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
