கொழும்பில் நீர் வழிந்தோடமுடியாமல் 60 இடங்கள்..

கொழும்பு நகரப் பகுதியில் நீர் வழிந்தோட முடியாதவாறு தடைப்பட்டுள்ள 60 இடங்கள் அடையாளம்

by Staff Writer 09-11-2026 | 10:12 AM

COLOMBO (News 1st) கொழும்பு நகரப் பகுதியில் நீர் வழிந்தோட முடியாதவாறு தடைப்பட்டுள்ள 60 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பலத்த மழை காரணமாக கொழும்பு நகர பகுதியில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக அரச நிறுவனங்கள் பலவற்றின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிக பாதிப்புக்குள்ளாகும் பின்வரும் இடங்களில் உள்ள தடைகளை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது:

* நாரஹேன்பிட்ட - கிரிமண்டல மாவத்தை
* பம்பலப்பிட்டி - ஹேக் வீதி
* வெள்ளவத்தை - கொலின்வூட் பிளேஸ் மற்றும் பரக்கும் வீதி
* குரே நகர வீடமைப்புத் திட்ட வளாகம்
* கிருலப்பனை - ஸ்டெஃபர்ட் வீதி மற்றும் அதற்கு இணையாக அமைந்துள்ள கிருலப்பனை கால்வாய்
* பேஸ்லைன் பிரதான வீதியை அண்டிய ஹீன் கால்வாய்
* தெமட்டகொடை - ஆராம வீதி
* மத்திய கொழும்பு - நியூ பஸார் பிரதேசம் மற்றும்
* டி மெல் வத்த மற்றும் பரடைஸ் வீதி 

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட ஐந்து தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டமானது இலங்கை இராணுவம், கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.