63ஆவது ABU மாநாடு இன்று..

ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச் சபை மாநாடு இன்று

by Staff Writer 01-11-2026 | 9:09 AM

COLOMBO (News 1st) ABU எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச் சபை மாநாடு இன்று (01)  நடைபெறகின்றது.

COLOMBO CINAMAN LIFE - CITY OF DREAMS ஹோட்டலில் மாநாடு நடைபெறகின்றது. 

சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் , சிரச ஊடக வலையமைப்பு என்பன இணைந்து இம்முறை மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 

மைஸ் டூரிசம் அதாவது கூட்டங்கள், ஊக்குவிப்புப் பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை அடிப்படையாக கொண்ட சுற்றுலாத்துறையை  மேம்படுத்தும் வகையில் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. 

இதற்காக சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பன மாநாட்டுடன் இணைந்துள்ளன. 

ஆசிய பசுபிக் பிராந்திய ஒளிபரப்பாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 66 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளதுடன் 225 இலத்திரனியல் ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றனர்.