.webp)
-561341.jpg)
Colombo (News 1st) கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து வீழ்ந்து 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீழே வீழ்ந்ததில் காயமடைந்த சிறுமி, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுமியின் பெற்றோர் வெளிநாட்டில் தங்கியுள்ள நிலையில், அவர் தனது பாட்டி மற்றும் சித்தப்பாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
