நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரிப்பு

70 சுகாதார வைத்தியர் அதிகாரிகள் பிரிவுகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரிப்பு

by Staff Writer 19-10-2026 | 8:14 AM

COLOMBO (News 1st) 70 சுகாதார வைத்தியர் அதிகாரிகள் பிரிவுகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 03 மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான நிலைமையினால் நாளாந்தம் தங்களது சுற்றுபுறச் சூழலை சுத்தம் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், 70 சுகாதார வைத்தியர் அதிகாரிகள் பிரிவுகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.