.webp)
-561069.jpg)
Colombo (News 1st) வெலிகம, கப்பரதொட்ட கடற்கரை பகுதியில் 06 பொதிகளில் 120 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை, போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், கடலோரப் பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த இடத்திலிருந்து 02 செயற்கைக்கோள் தொலைபேசிகளும் Starlink) தொகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, தெய்வேந்திரமுனையில் இருந்து 100 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பில் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
