அனோஜனின் மரணதண்டனை இரத்து - பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

by Staff Writer 14-10-2026 | 12:06 PM

Colombo (News 1st) சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரணதண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர, சட்டபூர்வ முயற்சிகளை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.