.webp)
-560974.jpg)
COLOMBO (News 1st) நேபாளத்தின் மத்தியப்பகுதியில் உள்ள ஆறொன்று திடீரென பெருக்கெடுத்தமையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனை தொடர்ந்து கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்தனர்.
இந்த அனர்த்ததினால் வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சேதமேற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆற்றை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவையடுத்து வௌ்ளம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வௌியிடப்பட்டுள்ளன.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில், பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1457 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
