IMF மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டம்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் மத்தியக்கிழக்கு போர் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும்

by Staff Writer 11-10-2026 | 1:02 PM

COLOMBO (News 1st) சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் மத்தியக்கிழக்கு போர் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் ஆரம்பிக்கப்பட்டு 8 மாதங்களாக தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், சர்வதேச ரீதியில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு, பொருளாதார சிக்கல்கள் சர்வதேச நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்கள் முதல் முறையாக வொஷிங்டனுக்கு வௌியில் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, மத்தியக்கிழக்கில் தொடர்ந்தும் பதற்ற நிலைமை அதிகரித்து வருகின்றது.

சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பணிபுரியும் அமெரிக்க ஊழியர்கள் கிங் காலித் விமான நிலையம் மற்றும் ஜெத்தா, தம்மாம் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி பெற வேண்டுமெனவும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில நகரங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சவுதி அரேபியாவின் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 309 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 4 சவூதி பிரஜைகளும், பங்களாதேஷ், எகிப்து, ஜோர்தான், பாலஸ்தீனம், சூடான், சிரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து குறித்த சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.