மெட்ரோ பஸ்களை தனியாருக்கு முன்பதிவு செய்ய முடியாது

மெட்ரோ பஸ்களை தனியாருக்கு முன்பதிவு செய்ய முடியாது: லங்கா மெட்ரோ ட்ரான்சிட் அறிவிப்பு

by Staff Writer 03-10-2026 | 1:09 PM

COLOMBO (News 1st):

மெட்ரோ பஸ்கள் தனியார் தேவைகளுக்காக முற்பதிவு செய்வதற்கான வசதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம் தெரிவிக்கின்றது. 
மெட்ரோ பஸ்களை தனியாரின் தேவைகளுக்காக முற்பதிவு செய்ய முடியும் என வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 
சரியான மற்றும் உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக் கொள்ள நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஊடக தொடர்பாடல் பிரிவை மாத்திரம் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.