இன்று 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 14-09-2026 | 7:48 PM

COLOMBO (News 1st)  - மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையை அண்மித்து நிலவும் கீழ் வளிமண்டல தளம்பல் நிலைமையே இதற்கான காரணமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

வறட்சி நிலவும் பகுதிகளிலும் கூட இன்று (15) மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15)​ அதிகாலை முதல் கடும் மழை பெய்தமையை காணக்கூடியதாக இருந்தது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.