.webp)
-560252.jpg)
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,104 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவற்றில் 978.9 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகளும் வீடுகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 109 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் மற்றும் 14 மில்லியன் ரூபா பணத்தின் பயன்பாட்டை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2023 முதல் இதுவரையான காலப்பகுதியில் சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 43 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படாத 38 குற்றவாளிகளும் குறித்த காலப்பகுதியில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள மேலும் 95 பேர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.
1818 என்ற துரித இலக்கத்திற்கு குற்றவாளிகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கிடைக்கப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய குறித்த துரித இலக்கம் ஊடாக இதுவரையில் 7,071 தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
