மின்னேரியா பஸ் விபத்தில் 20 பேர் காயம்

மின்னேரியா பஸ் விபத்தில் 20 பேர் காயம்

by Staff Writer 10-09-2026 | 10:55 AM

Colombo (News 1st) பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆவது மைல்கல் பகுதியில் பஸ் விபத்திற்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 16 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் நால்வர் ஹபரணை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெதிரிகிரிய - அம்பகஸ்வெ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்யே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.