நல்லூர் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

நல்லூர் கந்தனின் இரதோற்சவப் பெருவிழா

by Staff Writer 09-09-2026 | 10:10 AM

Colombo (News 1st) தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இன்று (09) இரதோற்சவம் இனிதே நிறைவடைந்தது.


​நல்லையம்பதியின் இரதோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வசந்த மண்டபத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீற்றிருக்கும் நல்லூர் சண்முகநாருக்கும் தேவியர் இருவருக்கும் விசேட பூஜைகள் இடம்பெற்றன.


தொடர்ந்து வேத மந்திர தோத்திர பாராயணங்கள் நடைபெற்று சண்முகப் பெருமான் இரதத்தில் ஆரோகணிக்கப்பட்டு காண்டாமணி ஓசையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க இரதோற்சவம் பக்தி மயமாக  நடைபெற்றது.


நல்லூர் ஆலய தீர்த்தோற்சவத் திருவிழா நாளை(10) காலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.