உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

2026 உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 06-09-2026 | 8:11 AM

COLOMBO (News 1st)

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் திருத்தும் பணிகள் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 
ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குள் இதனை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் செப்​டெம்பர் 24ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை நேற்றுடன் (05) நிறைவடைந்த நிலையில் இம்முறை பரீட்சைக்கு 3,76,310 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.