.webp)
-560111.jpg)
COLOMBO (News 1st)
மன்னார் வளைகுடாவிலுள்ள இயற்கை எரிவாயு வளத்தை பிரித்தெடுத்து பயன்படுத்துவதற்காக பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.இதற்காக அடுத்த வருடம் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடாவில் இயற்கை எரிவாயு வளம் காணப்படுகின்றமை இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையினால் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த செயற்பாடுகள் கொள்முதல் குழுவின் அனுமதிக்கமைய முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
