.webp)
-560123.jpg)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன் ஆரம்பக் கூட்டத்திற்கு இந்தோனேசியத் தூதுவர் சித்தார்த்தோ ரெஸா சூர்யோடிபுரோ (Sidharto Reza Suryodipuro) தலைமை தாங்கவுள்ளார்.
இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இதனிடையே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையும் இந்த வாரம் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
