எல்நினோ தாக்கம் குறித்த தரவு பகுப்பாய்வு ஆரம்பம்

எல்நினோ தாக்கத்தால் கடலுக்கும் மீன்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தரவு பகுப்பாய்வு

by Staff Writer 30-08-2026 | 2:38 PM

Colombo (News 1st) எதிர்வரும் காலத்தில் எல்நினோ நிலைமையால் கடலில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் மீன்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான தரவு பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை தெரிவித்துள்ளது.


கடற்றொழில் மற்றும் நீரியல் அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலையீட்டுடன் குறித்த தரவு பகுப்பாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


அத்துடன், எல்நினோ நிலைமையால் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட மீனவ சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


இதேவேளை, தற்போது நிலவும் மீன் விலை உயர்வானது எல்நினோ நிலைமையால் ஏற்பட்டதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.