மின்னுற்பத்திக்கு தேவையான நீர் ஒக்டோபர் வரை..

மின்னுற்பத்திக்கு தேவையான நீர் ஒக்டோபர் வரை..

by Staff Writer 23-08-2026 | 9:54 AM

Colombo (News 1st) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நீர் மின்னுற்பத்திக்கான போதுமான நீர் கொள்ளளவு காணப்படுவதாக தேசிய முறைமைகள் செயற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 67 சதவீதமாக காணப்படுவதாகவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


எதிர்கால மழை நிலைமையை கருத்திற்கொண்டு நீர் மின்னுற்பத்தி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேசிய முறைமைகள் செயற்பாட்டாளர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


நாடளாவிய ரீதியிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 50 சதவீதமாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 


எனினும், நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நீர்த்தேக்கங்களில் சேமிக்கக்கூடிய அளவு தற்போது 35 வீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் H.M.P.S.D ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.