எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நவீனமயப்படுத்தல்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 234 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 23-08-2026 | 1:41 PM

Colombo (News 1st) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் நவீனமயப்படுத்துவதற்காக விலைமனு கோரப்பட்டுள்ளது.


அவற்றின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


கூட்டுத்தபானத்திற்கு சொந்தமான 234 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.


இதற்கான விலைமனு கோரல் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.