குழாய் கிணறு திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

எல்நினோ தாக்கத்தினால் குழாய் கிணறு திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

by Staff Writer 20-08-2026 | 9:45 AM

Colombo (News 1st) நிலத்தடி நீரை பெற்றுக்கொள்ளும் குழாய் கிணறு திட்டத்தை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆரம்பித்துள்ளது.

எல்நினோ நிலைமையுடன் ஏற்படக்கூடிய வறட்சியான வானிலை காரணமாக ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படும் நீரின் அளவை கட்டுப்படுத்தவேண்டி ஏற்படுமாயின் அதற்கு முகங்கொடுக்கும் வகையிலேயே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எல்நினோ தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அவர் கூறினார்.