.webp)
-559145.jpg)
Colombo (News 1st) நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான சமித்புர சத்து என அழைக்கப்படும் திமுது சத்துரங்க மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்ற விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சமித்புர சத்துவிற்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் ஓமானிலிருந்து இன்று (18) அதிகாலை அவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், ஆட்கொலைகள், பாரிய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் குண்டொன்றை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
