.webp)
-558861.jpg)
Colombo (News 1st) மன்னார் - தாராபுரம் வனப்பகுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 11 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள கஞ்சாவை மறைத்துவைத்திருந்த சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
