கொழும்பு - குவைத் விமான சேவை மீண்டும்

மீண்டும் ஆரம்பமாகும் கொழும்பு - குவைத் விமான சேவை

by Staff Writer 09-08-2026 | 6:43 AM

COLOMBO (News 1st)

கொழும்பு மற்றும் குவைத் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

வாராந்தம் 06 விமான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதி திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறித்த விமானம் கொழும்பிலிருந்து மாலை 5.10 க்கு புறப்பட்டு இரவு 8.05 க்கு குவைத்தை சென்றடையும்.

அதே நாட்களில் இரவு 9.10க்கு குவைத்திலிருந்து புறப்படும் விமானம் மறுநாள் அதிகாலை 5.15 க்கு கொழும்பை வந்தடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.