SLFP-யின் சிந்தக டெரன்ஸ் விஜேரத்ன தடுப்புக்காவலில்

போதைப்பொருள் கடத்தல்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சிந்தக டெரன்ஸ் விஜேரத்ன தடுப்புக்காவலில்..

by Staff Writer 09-08-2026 | 2:30 PM

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சிந்தக டெரன்ஸ் விஜேரத்ன  07 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிந்தக டெரன்ஸ் விஜேரத்னவின் மனைவியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளைக் கொண்டுசென்ற போது ​​ஹிங்குக்கொடை பகுதியில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் மற்றும் 15 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.